Pages

Friday, August 9, 2019

Nouns derived from Verbs


வினைஅடிப்படையில் உருவாகும் பெயர்கள்


வினைஅடிப்படையில் உருவாகும் பெயர்கள் இரண்டு. அவை தொழிற்பெயர் மற்றும் வினையாலணையும் பெயர்

From verbal roots two kinds of nouns are derived. They are usually included in the conjugation (the variation of the form of a verb)of a verb 1.    தொழிற்பெயர் (Verbal Nouns)

ஒரு வினையிலிருந்து உருவாகி, அவ்வினையைக் குறிக்கும் பெயராகப் பயன்படுவது தொழிற்பெயர் ஆகும். தொழிற் பெயர் காலம் காட்டாது. தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் கிடையாது. இவை நான்கு வகை படும்.

  1. முதனிலைத் தொழிற்பெயர்
  2. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் –
  3. விகுதி குன்றிய தொழிற்பெயர்
  4. விகுதி குன்றாத தொழிற்பெயர் .
1.1.   முதனிலைத் தொழிற்பெயர்

ஒரு வினை அடிச்சொல் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பெயராக வரும் தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.


(எ.கா)
முதனிலைத் தொழிற்பெயர்பெயர்வினை
கட்டுஇரண்டு கட்டுக் கீரைபூக்களை மாலை கட்டு 
உதைகாவலர் கள்வனுக்கு ஓர் உதை கொடுத்தார்பந்தை உதை 

1.2.    முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

ஒரு வினை அடிச்சொல் சிறுசிறு மாற்றங்களுடன் பெயராக வரும் தொழிற்பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

வினைபெயர்
காண்கண்
எழுதுஎழுத்து
சுடுசுடர்
குதிகுதிரை

1.3.   விகுதி குன்றிய தொழிற்பெயர்

ஒரு வினையின் விகுதி குன்றி பெயராக வரும் தொழிற்பெயர், விகுதி குன்றிய தொழிற்பெயர் ஆகும்

வினைபெயர்
நடத்தல்  நடை
பாடுதல்பாடு
ஆடுதல்ஆடு

1.4.   விகுதி குன்றாத தொழிற்பெயர்

ஒரு வினையின் விகுதி எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பெயராக வரும் தொழிற்பெயர், விகுதி குன்றாத தொழிற்பெயர் ஆகும்

(எ.கா) : கெடுதல், ஆடுதல், ஆட்டம்

2.    வினையாலணையும் பெயர் (Participial Noun)

வினைமுற்றால் அணைந்து பெயரின் தன்மையை அடைந்து வருவது வினையாலணையும் பெயர் ஆகும். அது செயலையும், காலத்தையும், செய்பவனையும், இருதிணை, ஐம்பால், மூவிடங்களிலும் உணர்த்தி வேற்றுமை உருபையும் ஏற்று வரும்.

This denotes the agent of the action instead of the action itselg.

(எ.கா) :பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்

No comments:

Post a Comment

Learn Tamil

Learn Tamil for beginners, Words, Numbers, words denoting time, Grammar, Spoken Tamil Tamil for beginners Contents in th...