Pages

Saturday, August 10, 2019

Classification of Verbs





The classification of verbs in Tamil is unique and does not correspond to that of the classification of verbs in English. Wherever possible will try to give the corresponding name of the verb in English or close to the meaning.

The definition of finite and non-finite forms is syntactical (arrangement of words) rather than morphological (the study of the form of words).

முற்று
---------
முடிவு பெற்ற சொல் முற்று எனப்படும். பொதுவாக வினை முற்றைக் குறிக்கும்

எச்சம்
----------
சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் எனப்படும்

வினைமுற்று (Finite verb)
--------------------------------------
ஒரு செயல் முடிந்துவிட்டதே குறிப்பது வினைமுற்று எனப்படும்.
Finite Verb (வினைமுற்று) denotes the work has come to an end.

எடுத்துக்காட்டு கண்டான் (he saw), நடந்தான் (he walked), வருகிறான்(He is coming), பாடினாள் (she sang), ஆடினாள் (she danced)

வினைமுற்று வாக்கியத்தின் பயனிலைப்பகுதியாக வரும், அதாவது அவை ஒரு வாக்கியத்தை முடிக்கின்றன.
Finite verb forms occur as a predicate of the main clause, that is they end a sentence.

வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்

தெரிநிலை வினைமுற்று (Definite)
-----------------------------------------------
தெரிநிலை வினைமுற்று என்பது செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும்.
ஒரு வினைமுற்று, திணை, பால், காலம் போன்றவற்றையும், வெளிப்படுத்திச் சொல் வடிவை உணர்த்தி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிப்பது தெரிநிலை வினைமுற்றாகும்.

எ.கா. உழவன் நிலத்தை உழுகிறான்

இத்தொடரில் உழுகிறான் என்பது வினைமுற்று
இது உழுதல் என்னும் தொழிலைக் காட்டுவதோடு செய்பவன். கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆகியவற்றையும் தெரிவிக்கின்றது.
உழவன் – செய்பவன் (உழுதவன்)
ஏர் மாடுகள் – கருவி
வயல் – இடம் (நிலம்)
உழுதல் – செயல் (தொழில்)
உழுகிறான் – காலம் (நிகழ்காலம்)
வயல் புழுதியால் – செய்பொருள்

This verb shows subject, instrument, place, work, tense, and object

குறிப்பு வினைமுற்று (Indefinite)
செய்பவனையும் திணை பால்களையும் வெளிப்படையாக காட்டிக் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.

இவ்வினைமுற்று பொருள் இடம் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும்.

குறிப்பு வினைமுற்று ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையில் பிறக்கும்.

அவன் பொன்னன் – பொன்னன் உடையவன் – பொருள்
அவன் விழுப்புரத்தான் – விழுப்புரத்தில் வாழ்பவன்-இடம்
அவன் சித்திரையான் – சித்திரையில் பிறந்தவன் – காலம்
அவன் கண்ணன் – கண்களை உடையவன் – சினை
அவன் நல்லவன் – நல்ல இயல்புகளை உடையவன் – குணம்
அவன் உழவன் – உழுதலைச் செய்பவன் – தொழில்
அவன் என்னும் எழுவாய்க்கு(subject) பயனிலையாய்(predicate) வந்த ‘பொன்னன்’ என்பதே குறிப்பு வினையாகும். பொன்னை உடையவனாய் இருந்தான் இருக்கின்றான் இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.

பெயரெச்சம் (Adjectival Participle)
‘வந்த’ என்பது சிறுவன், நாய் என ஏதேனும் ஒரு பெயரைக் கொண்டு பொருள் முடிவு பெறும். இவ்வாறு ஒரு பெயரைக் கொண்டு, முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும்.

செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் அமைப்பினைக் கொண்டு இது வரும்.
செய்த வேலை, செய்கின்ற வேலை, செய்யும் தொழில்

பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்பு பெயரெச்சம் என இருவகைப்படும்.

தெரிநிலை பெயரெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும். இவை அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் இடைநிலை(intermediaries) அல்லது விகுதியைக்(terminations) கொண்டு பெயரெச்சம் காலம் காட்டும். இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் இடைநிலைகள் உணர்த்துகின்றன. எதிர்காலத்தை விகுதி உணர்த்துகிறது.

(எ.கா)
இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த பாடம்
('த்' இறந்தகால இடைநிலை)
நிகழ்காலப் பெயரெச்சம் – படிக்கின்ற பாடம்
('கின்று' நிகழ்கால இடைநிலை)
எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் பாடம்
('உம் பெயரெச்ச விகுதி)

குறிப்புப் பெயரெச்சம்

பெயரை காட்டி, காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
குறிப்புப் பெயரெச்சம் ‘அ’ என்னும் விகுதியைப் பெற்று வரும்.
(எ.கா)
சிறிய பையன்
புதிய பாடம்
அழகிய கவிதை
சிறிய, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று,பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.

வினையெச்சம் (infinitives or participles)
ஒரு எச்சம் (Residual) வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம் எனப்படும்.
எச்சம் என்பது எஞ்சி நிற்பதை குறிக்கும். ஒன்றைத் தழுவி நிற்பதை எச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு: நடந்து சென்றான் (he went by walking)
இதில் நடந்து என்பது முடிந்து போகாத சொல் எனவே இதனை எச்சம் என்கிறோம். இங்கு எச்சம் வினையைக் கொண்டு முடிந்து இருக்கின்ற காரணத்தினால் வினையெச்சம் எனப்படுகிறது

1. செய்ய (அ) , 2. செய்து (உ), 3. செய்தால் (ஆல்) என்னும் அமைப்பைக் கொண்ட எச்ச வினைகளை வினை எச்சம் என்பர்.
எ.கா. 1. செய்ய வேண்டும் (HAve to do), தரச் சொன்னேன்(Asked him to give), போக விரும்பினேன். (Wanted to go)
2. செய்து முடித்தேன் (Worked and finished_, வந்து தருகிறேன் (Will come and give you), போய்ப் பார்க்கிறேன் (Will go and see/check).
3. செய்தால் தருவேன் (If you do, I will give you), போனால் வரமாட்டாய் (If you will not come), இருந்தால் பார்க்கலாம் (If there let's see).

வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, வினைப்பகுதி, காலங்காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

எ.கா:
படித்துத் தேறினான் (He studied and succeeded)
வந்து நின்றான்
(He came and stood)


பிற வகைகள்

வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன.

Verbs other than the classification of ‘finite verb and ‘deficient verb’ can also be classified on the basis of their use. அவ்வகையில், (accordingly)

According to agent தன்வினை (subjective verb), பிறவினை (objective verb);

செய்வினை (active verb), செயப்பாட்டுவினை (passive verb);

உடன்பாட்டுவினை (affirmative verb), எதிர்மறைவினை (negative verb)

செயப்படுபொருள்குன்றாவினை (Transitive verb) செயப்படுபொருள்குன்றியவினை (Intransitive verb)

வியங்கோள் வினை (optative verb) ஏவல் வினை (imperative verb)

துணைவினை (auxiliary verb) குறைவினை (defective verb)

தொடர்மொழிவினை (compound verb)


தன்வினை (subjective verb); பிறவினை (objective verb)
தான் செய்வது தன்வினை. Work done by the subject is a subjective verb.
பிறரை ஏவிச் செய்விப்பது பிறவினை. Work made to do by the other is objective verb.

தன்வினை பிறவினை ஆகும் போது வி, பி, கு, சு, டு, று முதலிய விகுதிகளுள் ஒன்றையோ பலவற்றையோ ஏற்று வரும்.
சிறுபான்மையாக மேற்காட்டிய விகுதிகளை ஏற்க்காமல் மெல்லெழுத்து வல்லெழுத்தாகியும், நெடிற்றொடர் உயித்தொடர்க் குற்றியலுகரங்கள் வன்றொடர்க் குற்றயலுகரங்களாகியும் வரும்.
When an objective verb is formed from subjective verb the verb gets inflected by the terminations like வி, பி, கு, சு, டு, று. In some cases, the objective verb does not get inflected by the above terminations but soft letters change to strong letters, compound long letters short letters augmented by strong letters.


முதல் வகை - பிறவினையாகும்போது வி, பி, கு, சு, டு, று ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு

தன்வினைபிறவினை
செய்தான்செய்வித்தான்
பாடினான்பாடுவித்தான்
உண்டான்உண்பித்தான்
கற்றார்கற்பித்தார்
போதல்போக்குதல்
பாய்தல்பாய்ச்சுதல்
உருளுதல்உருட்டுதல்
நடத்தல்நடத்துதல்
எழுதல்எழுப்புதல்
துயிலல்துயிற்றுதல்
 
இரண்டாம் வகை -தன்வினை சொல்லின் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று

தன்வினைபிறவினை
திருந்தினான்திருத்தினான்
நடந்தான்நடத்தினான்
அடங்கினான் அடக்கினான்
 
மூன்றாம் வகை - தன்வினை சொல்லின் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று
தன்வினைபிறவினை
வாடுவாட்டு
பெருகுபெருக்கு
ஆடினாள்    ஆட்டுவித்தாள்
ஆறுதல்ஆற்றுதல்
ஓடுதல்ஓட்டுதல்
  செய்வினை, செயப்பாட்டுவினை

செய்தொழில் நட, வா, முதலிய முதனிலைகளையுடயனவாய்ப் படு விகுதி புணராது எழுவாய்க் கருத்தாவைக் கொண்டுவரும் வினைசொல், செய்வினை எனப்படும்.
செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
எ.கா : நாய் பூனையைக் கடித்தது.

செய்தொழில் நட, வா,முதலிய முதனிலைகளையுடயனவாய்ப் படு விகுதி புணர்ந்து மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவைக் கொண்டுவரும் வினைசொல், செயப்பாட்டுவினை எனப்படும்
எ.கா : பூனை நாயால் கடிக்கப்பட்டது.

உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

ஒருவினை நிகழ்ச்சியை, உண்டு என உடன்படுவது உடன்பாட்டுவினை.
எ.கா :வருகிறேன்

வினையின் தொழிலை மறுக்கின்ற வினைசொல், எதிர்மறை எனப்படும். இது ஆ, இல், அல் முதலிய விகுதிகளைக் கொண்டு முடியும்.
எ.கா :வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)

செயப்படுபொருள்குன்றியவினை, செயப்படுபொருள்குன்றாவினை செயப்படுபொருள்கு குன்றிய வினையாவது செயப்படு பொருளை வேண்டாது முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
எ.கா :வந்தான் இருந்தான் உறங்கினான் இதை நடந்தான், இதை வந்தான், என செயப்படுபொருள் ஏற்று வராது.

செயப்படு பொருள் குன்றாத வினையாவது செயப்படுபொருள் வேண்டி நின்று, முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
எ.கா : கொண்டான், கொடுத்தான். இவை சோற்றை உண்டான் பொருளைக் கொடுத்தான் என்ன செயப்படுபொருள் ஏற்று வரும்.

வியங்கோள் வினைமுற்று, ஏவல் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று, இருதிணை ஐம்பால் மூவ்விடங்களுக்கும் உரித்தாய் மரியாதை ஏவற் பொருளும் விருப்பப் பொருளும் உள்ள வினையாம். இதற்கு விகுதிகள் க, இய, இயர், அல், ஆக என்பவையாம். வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும்.

வெல்க, வாழ்க - வாழ்தல் பொருள்
வீழ்க, ஒழிக - வைதல் பொருள்
வருக, உண்க - விதித்தல் பொருள்
அருள்க, கருணைபுரிக - வேண்டல் பொருள்

முன்னிலை இடத்தில் கட்டளை உணர்த்தி வரும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்
அது ஏவல் ஒருமை வினைமுற்று, ஏவல் பன்மை வினைமுற்று என இருவகைப் படும்.
ஏவல் ஒருமை வினைமுற்று (எ.கா):
நீ நட, நீ செய், நீ போ, நீ படி
ஆ.ஏவல் பன்மை வினைமுற்று (எ.கா):

நீர் உண்குவீர்
நீர் வாரீர், நீர் செய்குதும்

துணைவினை (auxiliary verb)
--------------------------------------
ஒரு வினைச்சொல் பிற வினைச்சொற்களுடன் சேர்ந்து வரும்பொழுது தன் சொற்பொருளை இழந்து இலக்கணப்பொருளை உணர்த்தி வரும். அதுவே துணைவினை எனப்படும்.

எ.கா :இராமன் வந்திருந்தான்
இங்கு இராமன் வந்தான் என்றாலே போதும். ஆனால் ‘இரு’ என்ற துணை வினையைச் சேர்த்து இராமன் வந்ததை தெளிவாக அல்லது உறுதியாக உணர்த்திட செய்கிறது.

அடி, அருள், அழு, ஆயிற்று, இடு, இரு, எடு, ஒழி, கட்டு, கிட, கிழி, கூடு, கொடு, கொள், தள்ளு, தீர், தொலை, நில், படு, பண்ணு, பார், பிடி, போ, போக, போடு, மாட்டு, முடி, வா, வாங்கு, விடு, வேண்டு, வை போன்ற நாற்பதிற்கும் மேற்பட்ட வினைகள் துணைவினைகளாக வழங்குகின்றன.

இத்துணைவினைகள் முயற்சி, பலன் அளிக்காமை, உறுதி, துணிவு, முடிவு, மிகுதி, காரணம், கண்டிப்பு, வெறுப்பு, கோபம், சிறப்பு போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.

இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் வகையிலும் சில துணைவினைகள் அமைந்துள்ளன.



தலைமை வினை + துணை வினை = கூட்டுவினை சேர்க்கப்பட்ட பொருள்
(Main verb) (Auxillary verb) (Compound verb)  
வந்து இருந்தான்  வந்திருந்தான் உறுதி
எழுது விடு எழுதி விடு உறுதி
(லஞ்சம்) கொடுத்து பார்த்தான் (லஞ்சம்) கொடுத்துப் பார்த்தான் முயற்சி
நீயும் வந்து  தொலை நீயும் வந்து தொலை   விருப்பமின்மை


குறைவினை (defective verb)
--------------------------------------
குறைவினை என்பது கால இடைநிலை, பாலிட விகுதி ஏற்பதில்லை. சான்று : இல்லை, உண்டு.

No comments:

Post a Comment

Learn Tamil

Learn Tamil for beginners, Words, Numbers, words denoting time, Grammar, Spoken Tamil Tamil for beginners Contents in th...