Pages

Wednesday, May 23, 2018

COMBINATION AND ELLIPSIS

புணர்ச்சியும் தொகையும்


புணர்ச்சி

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைவதை அல்லது சேருவதை,  இலக்கணத்தில் புணர்ச்சி என கூறுவர்.  (புணர்தல் என்றால் சேர்தல் எனப்படும்) புணர்ச்சியும் மறு பெயர் சந்தி. புணர்ச்சியில் சேர்ந்து வரும் இரண்டு சொற்களில் முதலாவது வரும் சொல்லை நிலைமொழி என்றும் இரண்டாவது வரும் சொல்லை வரு மொழி என்றும் கூறுவர். புணர்ச்சியால் ஓசை இனிமையும் பொருள் தெளிவும் ஏற்படுகிறது

Combination (புணர்ச்சி) may be defined as the joining of a word with another that follows it so as to be pronounced flowing without any break.By combination of letters is meant the manner in which the final letter of the first and the initial letter of the second word combine with each other. Corresponding to this, there is nothing i the English language. It must however be remarked that the laws of comination are merely accommodations to the great law of eupohony.

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வரும் மொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும்

அல்வழி (Casal – of relating to case)பொருளிலோ (வேற்றுமை வழி அல்லாத நிலை) வேற்றுமை பொருளிலோ (non-Casal)சேர்ந்து வரும்பொழுது நிலைமொழியும் வருமொழியும் இயல்பாக இருந்தோ விகாரம் பெற்றோ பொருந்தி வரும். இவ்வாறாக புணர்ச்சி இயல்பு புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என்று இரு வகைப்படும்.

Combination of letters is of two kinds, Natural and Mutational.

1.     இயல்பு புணர்ச்சி (Natural combination)

இவ்வாறு இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப்புணர்ச்சி. அல்வழிப் புணர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாததனால் அது இயல்புப் புணர்ச்சியில் இடம்பெறும்

It is natural, if no changes take place in the union of the final and initial word.

(எ.கா.) :
வாழை + மரம்  = வாழைமரம்
கண் + காட்சி = கண்காட்சி
மண் + வெட்டி   = மண்வெட்டி
கொடி + மரம்   = கொடிமரம்

2.     விகாரப்புணர்ச்சி

இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விகாரப்புணர்ச்சி என்பர். வேற்றுமை புணர்ச்சி விகாரப்புணர்ச்சயில் இடம்பெறும். இவ்வாறாக விகாரப் புணர்ச்சி தோன்றல் விகாரம், திரிதல் விகாரம் & கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படும்.

There are three kinds of of combination - 1. Insertion (தோன்றல்), Transmutation (திரிதல்) and Omission .கெடுதல்)(

2.1.  தோன்றல் விகாரம்

புணர்ச்சியின் போது புதிய எழுத்து ஒன்று சேர்ந்தால் அது தோன்றல் விகாரம் எனப்படும்.
(எ.கா.)
காலை + பொழுது = காலைப்பொழுது
மா + பழம் = மாம்பழம்

2.2.  திரிதல்  விகாரம்

புணர்ச்சியின் போது ஒரு எழுத்து வேர் ஓர் எழுத்தாக மாறினால் திரிதல் விகாரம் எனப்படும்.
(எ.கா.)
கல் + குகை =  கற்குகை
மண் + பானை = மட்பானை
பொன் + குடம் = பொற்குடம்

2.3.  கெடுதல் விகாரம்

புணர்ச்சியின் போது எழுத்துக்கள் கெடுமாயின் அது கெடுதல் விகாரம் எனப்படும்.
(எ.கா.)
மரம்+ வேர் = மரவேர்
பணம் + வரவு = பணவரவு

புணர்ச்சி விதிகள் (Rules of combination)


✤      பல, சில என்பனவற்றின் புணர்ச்சி

பல சில என்னும் சொற்களுடன்  வருமொழி சேரும் பொழுது அகரம் கெட்டும், கெடாமலும் புணரும்.
(எ.கா.)
பல + நாடு =  பலநாடு/ பன்னாடு
சில + சொல் = சில + சொல் / சிற்சொல்
பல + சாலை = பலசாலை / பல்சாலை
பல + மலர் = பன்மலர்
பல + பல = பலபல / பற்பல 
சில + சில = சில்சில / சிலசில 

✤      திசைப் பெயர்ப் புணர்ச்சி

ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.

வடக்கு
வடக்கு + கிழக்கு     = வடகிழக்கு
வடக்கு + மேற்கு     = வடமேற்கு

இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.

தெற்கு
தெற்கு + கிழக்கு     = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு     = தென்மேற்கு
தெற்கு + குமரி     = தென்குமரி
தெற்கு + பாண்டி     = தென்பாண்டி

இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

மேற்கு
மேற்கு + காற்று = மேல்காற்று
மேற்கு + ஊர் = மேலூர்

இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

கிழக்கு
கிழக்கு + கடல்     = கீழ்கடல்
கிழக்கு + நாடு     = கீழ்நாடு

இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.

✤      மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி

1. ஈறு கெடுதல்
வெண்மை + பட்டு = வெண்பட்டு
வெண்மை + குடை  = வெண்குடை
செம்மை + மலர் = செம்மலர்

கீழே உள்ள மற்ற வகையில் ஈறு கெட்டு வேறு சில விகாரங்களும் ஏற்படும்.

லகரம் மிகல்
நன்மை + அன் = நல்லன் (முன் ஒற்றாகிய னகர வொற்று லகர ஒற்றாகி இரட்டல்)

இடை உகரம் இய்யாதல்
பெருமை + அன் = பெரியன் (இடையில் உள்ள உகரம் (ரு) இகரமாகத் (ரி) திரிந்தது)

சிறுமை + அன் = சிறியன் (இடையில் உள்ள உகரம் (று) இகரமாகத் (றி) திரிந்தது)

ஆதி நீடல்
முதுமை + ஊர் = மூதூர் (முதல் எழுத்து நீண்டு மூதூர் என்று ஆயிற்று)

பசுமை + இ = பாசி (முதல் எழுத்து நீண்டு பாசி என்று ஆயிற்று)

பசுமை + கொடி = பைங்கொடி அடியகரம் ஐ ஆதல் (முதல் எழுத்து அகரம் (ப) ஐகாரமாய்த் (பை) திரிந்தது. வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங்) மெய் மிகுந்து புணர்ந்தது)

அடியகரம் ஐ ஆதல்
பசுமை + தார் = பைந்தார் (முதல் எழுத்து அகரம் (ப) ஐகாரமாய்த் (பை) திரிந்தது. வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங்) மெய் மிகுந்து புணர்ந்தது)

இனவெழுத்துக்கள் என்றால் என்ன என்பதை இங்கே கவனியுங்கள்

மெய்யெழுத்தில் வல்லெழுத்து ஆறும் மெல்லெழுத்து ஆறும் முறை முறையே இனஎழுத்துக்களாகும் அதாவது தகரத்துக்கு நகரமும் எழுத்து ஆறும் ஓரினம் அதற்கு வேறு இனம் கிடையாது.

கீழே உள்ள அட்டவணையில் இருந்து இன எழுத்துக்களை அறியவும்

வல்லினம் க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் ங் ஞ் ண் ந் ம் ன்

தன்னொற்று இரட்டல்
சிறுமை + ஊர் = சிற்றூர் (நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்தது)

வெறுமை + இலை = வெற்றிலை (நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்தது)

முன்னின்ற மெய் திரிதல்
வெம்மை + வேல் = வெவ்வேல் (முன் ஒற்றாகிய மகர வொற்று வருமொழியின் வகர ஒற்றுக்கு இனங்கி ‘வ’கர ஒற்றாக திரிந்தது.

வெம்மை + நீர் = வெந்நீர் (முன் ஒற்றாகிய மகர வொற்று வருமொழியின் நகர ஒற்றுக்கு இனங்கி ‘ந’கர ஒற்றாக திரிந்தது.

இனம் மிகல்
செம்மை + கோல் = செங்கோல் (வருமொழி முதல் எழுத்து (க) வுக்கு இனவெழுத்து (ங்) மிக்குப் புணர்ந்தது

செம்மை + தமிழ் = செந்தமிழ் (வருமொழி முதல் எழுத்து (த)வுக்கு இனவெழுத்து (ந்) மிக்குப் புணர்ந்தது.

✤      உடலும் உயிரும்:
 

தமிழ் + ஆசிரியர்    = தமிழாசிரியர்
கடவுள் + அருள்     = கடவுளருள்
பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்
 
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.

✤      பூப்பெயர்ப் புணர்ச்சி>


பூ + கொடி     = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + பாவை     = பூம்பாவை
 
பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.
 
பொதுவிதிப்படி பூ முன்னர் வரும் வல்லினம் மிகும்
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
பூ + கூடை = பூக்கூடை
பூ + கடை = பூக்கடை

✤      தேங்காய் - புணர்ச்சி:

தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’  (தென்னை) என்பதாகும்.
தெங்கு + காய் = தேங்காய்
‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.

✤      தனிக்குறில் முன் ஒற்று

கண் + ஒளி = கண்ணொளி
பண் + ஓசை = பண்ணோசை
மண் + ஓசை = மண்ணோசை
 
இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும்.

✤      உடம்படுமெய்

மணி + அடித்தது = மணியடித்தது.     (இ)
தீ  + எரிந்தது = தீயெரிந்தது     (ஈ)
வாழை + இலை     = வாழையிலை     (ஐ)
நிலா + அழகு = நிலாவழகு     (வ)
சே + அழகு = சேயழகு ; சேவழகு (ய,வ)
 
நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பிய் யகரம் வகரம் ஆகிய இரண்டுஉடம்படுமெய்களும் தோன்றும்.

உடம்படுமெய் என்பது நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து 

✤      வல்லினம் மிகும் இடங்கள்:

அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிவோம்.
1.    அந்த, இந்த- முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

அந்த + பையன் = அந்தப்பையன்
இந்த + பெட்டி = இந்தப்பெட்டி

2.    அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை
 

3.    அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

அவ்வகை + காடு    = அவ்வகைக்காடு
இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்
 

4.    மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

மற்ற + கலைகள்     = மற்றக்கலைகள்
மற்று + சிலை     = மற்றுச்சிலை
மற்றை + பயன்     = மற்றைப்பயன்
 

5.    “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் ” வரும் வல்லினம் மிகும்.

மோர் + குடம்     = மோர்க்குடம்
மலர் + கூந்தல்     = மலர்க்கூந்தல்
தயிர் + பானை     = தயிர்ப்பானை
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி

6.    “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் ” வரும் வல்லினம் மிகும்.

மரம் + பெட்டி     = மரப்பெட்டி
இரும்பு + தூண்     = இரும்புத் தூண்
தங்கம் + தாலி     = தங்கத்தாலி
 

7.    “நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில் ” வரும் வல்லினம் மிகும்.

குடை + கம்பி     = குடைக்கம்பி
சட்டை + துணி     = சட்டைத்துணி

8.    “ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் ” வரும் வல்லினம் மிகும்.

அடுப்பு + புகை     = அடுப்புப்புகை
விழி + புனல்     = விழிப்புனல்

9.    “பண்புத் தொகையில் ’ வரும் வல்லினம் மிகும்.

புது + குடம்     = புதுக்குடம்
வட்டம் + பலகை     = வட்டப்பலகை
பொய் + செய்தி     = பொய்ச்செய்தி

10.    ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் ’ வல்லினம் மிகும்.

வேழம் + கரும்பு     = வேழக்கரும்பு
தாமரை + பூ     = தாமரைப்பூ
மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்

11.    ‘உவமைத் தொகையில் ’ வரும் வல்லினம் மிகும்.

தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
மலை + தோள்     = மலைத்தோள்
 

12. “அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.

அரை + காணி     = அரைக்காணி
அரை + படி     = அரைப்படி
பாதி + பங்கு     = பாதிப்பங்கு
அரை + தொட்டி     = அரைத்தொட்டி
பாதி + செலவு     = பாதிச்செலவு
 

13. ‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.

திரு + கோவில்    = திருக்கோவில்
புது + பை     = புதுப்பை
பொது + சாலை     = பொதுச்சாலை
 

14. “தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.

வினா + குறி   = வினாக்குறி
பலா + பழம்     = பலாப்பழம்

15. ‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்’ பின்வரும் வல்லினம் மிகும்.

கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்
அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்
போய் + பார்     = போய்ப்பார்
 

16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்
பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்
முன்னர் + செல்க     = முன்னர்ச்செல்க
பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்

17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

பட்டு + சேலை     = பட்டுச்சேலை
பத்து + பாட்டு     = பத்துப்பாட்டு

✤       வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

1. ‘ அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது
இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?
எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?

2. ‘ அத்தனை, இத்தனை, எத்தனை ’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?

3. வினாப்பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?
அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?
யாரே + கண்டார் = யாரே கண்டார்?

4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.

பெரிய + பெண் = பெரிய பெண்
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
நில்லாத + செல்வம் = நில்லாத செல்வம்
அழியாத + கல்வி = அழியாத கல்வி

5. ‘ எட்ட, பத்து, ’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

ஒன்று + கேள் = ஒன்று கேள்
ஒரு + பொருள் = ஒரு பொருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவை = இரு பறவை
மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்
நான்கு + பேர் = நான்கு பேர்
ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்
ஆறு + கோவில் = ஆறு கோவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்
ஏழு + பிறப்பு = எழு பிறப்பு
ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்

6. ‘ இரட்டைக் கிளவியிலும், அடுக்குத்தொடரிலும் ’ வல்லினம் மிகாது.

கல + கல = கலகல இரட்டைக் கிளவிகள்
சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்
பள + பள = பளபள - அடுக்குத்தொடர்கள்
தீ + தீ = தீதீ - அடுக்குத்தொடர்கள்
பார் + பார் = பார்பார் ! - அடுக்குத்தொடர்கள்

7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.

கற்க + கசடற = கற்க கசடற
வெல்க + தமிழ் = வெல்க தமிழ்
வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்

8. ‘ அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.

பல + பசு = பல பசு
சில + கலை = சில கலை
அவை + தவித்தன = அவை தவித்தன

9. ‘ஏவல் வினை ’ முன் வரும் வல்லினம் மிகாது.

வா + கலையரசி = வா கலையரசி
எழு + தம்பி = எழு தம்பி
போ + செல்வி = போ செல்வி
பார் + மகளே = பார் மகளே

10. ‘ மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, >ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவனொடு கண்ணகி வந்தாள்.
துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.
அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்.

11. ‘ செய்யிய ’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.

காணிய + சென்றேன் = காணிய சென்றேன்

உண்ணிய + சென்றாள் = உண்ணிய சென்றாள்

12. “ பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப் ” பின்வரும் வல்லினம் மிகாது.

தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.

13. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.

மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
மலையினின்று + சரிந்தது = மலையினின்று சரிந்தது.

14. “ வினைத் தொகையில் ” வல்லினம் மிகாது.

விரி + சுடர் = விரிசுடர்
பாய் + புலி = பாய்புலி

15. உம்மைத் தொகையில் ” வல்லினம் மிகாது.
காய் + கனி = காய்கனி
தாய் + தந்தை = தாய்தந்தை

16. ‘ அது , இது என்னும் சட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.

17. எது , யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?

18. ‘ விளித் தொடரில் ’ வல்லினம் மிகாது.

கண்ணா + பாடு = கண்ணா பாடு.
அண்ணா + கேள் = அண்ணா கேள் !

19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘ கள்,தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.

எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
போற்று + தல் = போற்றுதல்
நொறுக்கு + தல் = நொறுக்குதல்

20. ‘ இரண்டு வட சொற்கள் ’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.
கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்
சங்கீத + சபா = சங்கீத சபா

No comments:

Post a Comment

Learn Tamil

Learn Tamil for beginners, Words, Numbers, words denoting time, Grammar, Spoken Tamil Tamil for beginners Contents in th...